சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.
முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் உள்ளிட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா மோகன், தனது சினிமாவில் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், என்ஜினீயரிங் படிப்பை முடித்ததும் நிரந்தரமான நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதே கனவாக இருந்தது. நான் மட்டும் சினிமாவில் வராமல் இருந்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் வேலையில் இருந்திருப்பேன்.
மேலும் அவர், ” எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். வரது நடிப்பு மட்டுமல்ல சிம்ப்ளிசிட்டியும் ரொம்ப பிடிக்கும்.என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அதேபோல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிறு வயதில் அவர் என்னுடைய கிரஷ்” என்று பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.
Comments are closed.