சிக்னலில் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு நடந்த பிரச்சனை.. அதிர்ச்சியளிக்கும் பதிவு

9

தமிழ் சினிமாவில் கடந்த 2016 – ம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

அந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் மற்றும் பிரவு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் பருவு எனும் வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது.

இந்நிலையில், நடிகை பெத்துராஜ் அவரிடம் வழிப்பறி நடந்துள்ளதாக கூறி அவரது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் நான் ஏமாற்றப்பட்டேன்.

முதலில் அந்த சிறுவன் ரூ. 50 – க்கு என்னிடம் ஒரு புத்தகத்தை விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100 யை எடுத்தேன். அதை கண்டு என்னிடம் ரூ. 500 கொடுக்குமாறு கேட்டான்.

நான் அவனிடம் அந்த புத்தகத்தை திருப்பி கொடுத்து ரூ.100யை மீண்டும் வாங்கினேன். அப்போது புத்தகத்தை காருக்குள் வீசி என் கையில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு அந்த சிறுவன் சென்று விட்டான்” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.