KGF 3 படப்பிடிப்பு.. அஜித் நடிக்கிறாரா? KGF நடிகை சொன்ன தகவல்

5

2022ஆம் ஆண்டு இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் KGF 2. முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து KGF 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

KGF 2 படத்தின் இறுதியில் KGF 3 படத்திற்காக லீடு கொடுத்திருப்பார் இயக்குனர் பிரஷாந்த் நீல். இதனால் KGF 3 படம் எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகிறார் என தகவல் இணையத்தில் உலா வந்த நிலையில், KGF 3 படத்திலும் அஜித் நடிக்கவுள்ளார், அது பிரஷாந்த் நீலின் யூனிவர்ஸாக மாறப்போகிறது என பேசி வந்தனர். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், KGF படத்தில் நடித்த நடிகை மாளவிகா அவினாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில், KGF 3-யின் லீடுக்கான படப்பிடிப்பு நடந்ததாக கூறியுள்ளார்.

பின் அஜித் இப்படத்தில் நடிக்கிறாரா? என தொகுப்பாளினி கேள்வி எழுப்ப, எனக்கு தெரியவில்லை இயக்குனரின் போன் நம்பர் வேண்டுமென்றால் தருகிறேன், நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

Comments are closed.