சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியின் டிஆர்பியை பீட் செய்ய எந்த ஒரு தொலைக்காட்சியும் இதுவரை வரவில்லை. அவ்வப்போது விஜய் சீரியல்கள் வரும் ஆனால் சன் டிவி தான் அதிகம் டாப்பில் இருக்கும்.
இதில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, மருமகள், மூன்று முடிச்சு போன்ற தொடர்கள் இப்போது நல்ல ரீச் பெற்று வருகிறது. சாதாரண மக்களை தாண்டி சினிமா பிரபலங்களும் சன் டிவி தொடர்களுக்கு ரசிகராக உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு பெரிய ரசிகர். இந்த தகவல் எப்போதோ வெளியாகி இருந்தது. தற்போது நடிகை நயன்தாராவிற்கு பிடித்த தொடர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு சன் டிவியின் கயல் சீரியல் மிகவும் பிடிக்குமாம், ஒரு எபிசோடை கூட தவறாமல் பார்ப்பாராம். சைத்ரா ரெட்டி-சஞ்சீவ் முதன்முறையாக இணைந்து ஜோடியாக நடிக்கும் இந்த தொடர் சமீபத்தில் டிஆர்பியில் டாப்பில் வந்தது.
Comments are closed.