கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்த இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று லாபத்தை கொடுத்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வேட்டையன் படத்தின் இறுதி வசூல் ரூ. 265 கோடி என சொல்லப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 104 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பிளாக். இப்படத்தை அறிமுக இயக்குனரான சுப்பிரமணி இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
இந்த நிலையில் சூப்பர்ஹிட்டாகியுள்ள பிளாக் படம் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.