இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கும் ஈரானின் நாசகார திட்டம் அம்பலம்

19

இஸ்ரேல்(israel), காசா(gaza) மற்றும் லெபனானில்(lebanon) ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.தற்போது இந்தப் போர் விரிவடைந்து ஈரான்(iran) பக்கம் சென்றுள்ளது.

மேற்படி அமைப்புகளுக்கு ஈரான் பின்புலமாக இருந்து ஆயுத உதவி,பண உதவி மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது. இதனை நிரூபிக்கும் விதமாக ஈரானும் செயற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

இந்த நிலையில் இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கத் தேவையான அணு குண்டுகளை உருவாக்கி வைக்க ஈரான் முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு;

“எங்களை அழிக்க ஈரான் அணு குண்டுகளை உருவாக்க முயல்கிறது.. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அணு குண்டை பொருத்த முயல்கிறார்கள். எங்களுக்கு மட்டும் இல்லை.. ஒட்டுமொத்த உலகையும் கூட ஈரான் எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தலாம்.

ஈரான் இப்போது அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதே எங்களின் முதல் நோக்கம். இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான எங்கள் திட்டங்களை தற்போது என்னால் பகிர முடியாது” என்றார்.

“ஈரான் தலைமையிலான தீய சக்திகள் நமது நாட்டை அழிக்க முயல்கின்றன.. பிராந்திய அமைதியைச் சீர்குலைத்து இந்த பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயல்கிறது. இதற்கு நாம் தடையாக இருப்பதாலேயே நம்மை அழிக்க முயல்கிறார்கள்.

Comments are closed.