தொகுப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் அமரன் படம் வெளிவர உள்ள நிலையில், கல்லூரி ஒன்றில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பொறுமையாக சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார். அப்போது படம் குறித்து சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
அதில், “ஆர்மி உடையை கடைசியாக போடும் போது பல நினைவுகள் எனக்கு தோன்றியது அதனால் அந்த உடையை நான் என் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டேன்.
மேலும், இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நான் என் மனதை முதலில் தயார் செய்து கொண்டேன். பின் தான் என் உடலை தயார் செய்தேன். உடல் வலிமை இருந்தால் தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனிடம் விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு, ” சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் அதிகம் உள்ளது. எனவே அரசியலுக்கு வருவதைப் பற்றி பின்னர் பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.
Comments are closed.