கடந்த செப்டம்பர் மாதம் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
தன்னுடைய வேளையில் குறுக்கீடு இருந்ததன் காரணமாகவும், சுயமரியாதை முக்கியம் என்று முடிவு எடுத்ததால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் என மணிமேகலை கூறியிருந்தார்.
மேலும் தன்னுடைய வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் பிரியங்கா என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். மணிமேகலையின் இந்த குற்றச்சாட்டுக்கு பிரியங்கா பதிலளிக்கவில்லை என்றாலும், பிரியங்காவிற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். பின் இந்த விஷயம் அப்படியே அமைதியாகிவிட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் விஜே விஷால், சாச்சனா மற்றும் ஜெஃப்ரி ஆகியோர் இணைந்து பிரியங்கா – மணிமேகலை சர்ச்சை குறித்து பேசியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments are closed.