ரிஷி சுனக்கின் காரில் ஏறச்சென்ற டாம் குரூஸ்., வைரலாகும் காணொளி

17

லண்டனில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் (Tom Cruise) பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) காரில் ஏறச்சென்ற காணொளி வைரலாகிவருகிறது.

நடிகர் டாம் குரூஸ் லண்டனில் உள்ள எட்மிஸ்டன் லண்டன் ஹெலிபோர்ட்டில் பிரித்தனைய பிரதமர் ரிஷி சுனக்குடன் காணப்பட்டார்.

வைரலாகும் இந்தக் காணொளி,ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் தனது கருப்பு நிற Audi காரில் ஏறி அமரும் காட்சியை காட்டுகிறது.

சில வினாடிகளுக்குப் பிறகு வெளியே வேகமாக வந்த நடிகர் டாம் குரூஸ், தனது கார் என நினைத்து தவறுதலாக பிரதமரின் காருக்குள் ஏற முயற்சித்தார்.

ஆனால் உடனடியாக சுதாரித்துக்கொண்ட டாம், பிரதமர் காருக்கு அருகில் நிற்கும் தனது கருப்பு நிற Mercedes காரில் ஏறினார்.

அப்போது, அவர் அந்த இடத்தில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு கையசைத்துச் சென்றார். தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.

ஜூன் 3 அன்று, சவுத்ஹாலை தளமாகக் கொண்ட இன்ஸ்டாகிராம் கணக்கு இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது, அங்கு அது 31,000-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது.

அந்த காணொளியுடன், “அடுத்த Mission Impossible படத்தில் ரிஷி சுனக் நடிக்கப் போகிறார் என்று என்னிடம் சொல்ளிவிடாதீர்கள்” என்று வேடிக்கையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

சமீபத்திய வாரங்களில், டாம் குரூஸ் லண்டன் முழுவதும் பல இடங்களில் காணப்பட்டார். அவர் தற்போது லண்டனில் Mission: Impossible – Dead Reckoning Part Two படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

Comments are closed.