இந்தியாவிலிருந்து கனடா புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த பயணிகள், விமான நிலையத்துக்கு வந்த ஒரு செய்தியால் திகிலில் உறைந்தார்கள்.
இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு, ஏர் கனடா விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது.
10.50 மணிக்கு விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், ரொரன்றோ செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி அறிந்த பயணிகள் திகிலில் உறைந்தனர்.
உடனடியாக, அதிகாரிகள் விமானத்தை சோதனையிட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய வகையில் எந்தப் பொருளும் விமானத்தில் இல்லை என்பது தெரியவரவே, அச்சத்தில் ஆழ்ந்திருந்த பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். மின்னஞ்சலை அனுப்பிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Comments are closed.