இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன்(Katte Middleton) புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் பொது நிகழ்வுகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி அவரின் பங்கேற்பு இல்லாத நிலையிலே அரச பணிகள் தொடர்பான பல அறிக்கைகள் வெளியாகியுள்தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் 2024 ஜூன் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான கேர்னல் மதிப்பாய்வில் கேட் மிடில்டன் கலந்து கொள்ள மாட்டார் என்று அரண்மனை அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் அவரே முதன்மை பங்கேற்பாளராக இருந்திருக்க வேண்டிய நிலையில் அவர் குணமடைய தனியுரிமை தேவை என்று அரண்மனை தெரிவித்துள்ளது.
பொது பார்வையில் இருந்து கேட் மிடில்டன் விலகி இருந்தாலும், தமது பிள்ளைகளான 10வயதான இளவரசர் ஜோர்ஜ், 9 வயதான இளவரசி சார்லோட், 9 மற்றும் 6வயதான இளவரசர் லூயிஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம், கேட் ஒரு காணொளியின் மூலம் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.