இலங்கை மக்களுக்கு தொலைத்தொடர்பு ஆணையம் விடுத்துள்ள எச்சரிக்கை

8

சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகளுக்கு வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஆணையம் இது தொடர்பில் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

பல்வேறு பரிசுத் தொகைகள் மற்றும் ஏனைய சலுகைகள் வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பாக மக்கள் தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு அறிவித்திருந்தது.

இவ்வாறான போலி செய்திகளால் சிக்கிய பலர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.

Comments are closed.