நாட்டில் தொடரும் மழை நிலை காரணமாக, சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் வல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்தின் நயாகம, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நேற்று (07) காலை 9.30 மணி முதல் இன்று இரவு 9.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளதுடன் மழை நிலைமை தொடரலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு பிரதேசத்தில் 162.5 மி.மீ அளவிற்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Comments are closed.