ஓடவிட்ட பிக் பாஸ்.. முதல் வார கேப்டனாக ஜெயித்தது யார் பாருங்க

8

பிக் பாஸ் 8வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரண்டாக பிரிக்கப்பட்ட வீடு, 24 மணி நேரத்தில் எலிமினேஷன் என பரபரப்பான பல சம்பவங்கள் நடந்து முடிந்து இருக்கிறது.

இந்நிலையில் முதல் வாரத்தில் வீட்டின் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய டாஸ்க் நடத்தப்பட்டது.

ஆண்கள் ஒரு பக்கம், பெண்கள் ஒரு பக்கம்.. இருவரும் ஓடிச்சென்று எதிரில் இருக்கும் சேரில் அமர வேண்டும். ஒவ்வொரு ரவுண்டுக்கு ஒரு சேர் குறைக்கப்பட்டு, யார் சேர் இல்லாமல் கடைசியாக நிற்கிறாராரோ அவர் போட்டியில் இருந்து வெளியில் செல்வார்.

அப்படி பரபரப்பாக நடந்த போட்டியில் பெண்கள் டீமில் இருந்த தர்ஷிகா வெற்றி பெற்று தலைவியாக பதவியை பிடித்தார்.

அதனால் அவர் முதல் வார நாமினேஷனில் இருந்தும் தப்பி இருக்கிறார்.

Comments are closed.