மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருந்து வந்தார். அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா தொடர்ந்து தன்னுடைய புதிய படங்கள் குறித்து அறிவித்து வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கில் உருவாகவுள்ள பங்காரம் எனும் திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது. அதே போல் அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் சமந்தா நடிக்கிறார் என பேச்சு வார்த்தை எழுந்த நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
நடிகை சமந்தாவிற்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமான வீடு ஒன்று இருக்கிறது. இதனுடைய மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகைகளில் விலைஉயர்ந்த வீடு வைத்திருப்பவர் நடிகை சமந்தா தான் என தகவல் தெரிவிக்கின்றனர்.
Comments are closed.