தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் தொடராக சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது.
அண்ணாமலை என்ற நியாயமான ஒருவரின் குடும்ப கதையாக இந்த தொடர் உள்ளது. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் மிகவும் எதார்த்தமான கதைக்களம் கொண்டு உள்ளது.
தற்போது கதையில் முத்து-மீனா க்ரிஷ்ஷை வீட்டிற்கு அழைத்து வர ரோஹினி ஒருகட்டத்தில் நான் தான் உன் அம்மா என்று ஒப்புக்கொள்கிறார். இந்த கதைக்களம் எல்லாம் ஒளிபரப்பாகிவிட்டது.
ஆனால் ரசிகர்களுக்கு எப்போது ரோஹினி சிக்குவார் என்ற கோபம் தான் அதிகமாக உள்ளது.
இன்றைய எபிசோடின் கடைசியில் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை நடக்கப்போகும் விஷயத்தின் சின்ன புரொமோ வெளியாகியுள்ளது. அதில் முத்து மீனாவிடம் நமது வீட்டில் விரைவில் குழந்தை சத்தம் கேட்கப்போவதாக தெரிகிறது என சந்தோஷமாக கூறுகிறார்.
பார்லர் அம்மா அந்த எண்ணத்தில் உள்ளதாக கூற அதை ரோஹினி மற்றும் மனோஜ் கேட்கிறார்கள்.
உடனே மனோஜ் உனக்கும் நமக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறதா என ரோஹினியை பார்த்து கேட்க அதற்கு அவர் முறைக்கிறார்.
Comments are closed.