நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… பிரித்தானிய மக்களுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய வாக்குறுதி

16

பிரித்தானியாவில், அடுத்த மாதம், அதாவது, ஜூலை மாதம் 4ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், லேபர் கட்சி ஆட்சியைப் பிடிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் கவனத்தை ஈர்க்க, பிரதமர் ரிஷி தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அவ்வகையில், புதிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார் அவர்.

வரும் பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றிபெற்றால், புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம் என்று வாக்குறுதியளித்துள்ளார் ரிஷி.

பிரித்தானியாவைப் பொருத்தவரை, தற்போது புலம்பெயர்தல்தான் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. ஆகவே, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுப்போம் என்று கூறியுள்ளார் ரிஷி.

அதன்படி, இனி. ஆண்டுக்கு இத்தனை பேருக்குத்தான் பணி விசாக்களும், குடும்ப விசாக்களும் வழங்கப்படும் என்னும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் ரிஷி

Comments are closed.