Caregiver பணிக்காக கனடா வருபவர்களுக்கு எளிதில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கும் வகையில், சில புதிய திட்டங்களை கனடா அரசு அறிவித்துள்ளது.
கனேடிய மக்களில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, Caregiver பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில், சுமார் 9 மில்லியன் கனேடியர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால், அவர்களை கவனித்துக்கொள்ள ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
இன்னொரு விடயம், ஏற்கனவே Caregiver பணியிலிருப்போரில் பலர் 65 வயதைக் கடந்தவர்கள். உண்மையில் சொல்லப்போனால், இனி அவர்களை கவனித்துக்கொள்வதற்கு பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
ஆக, இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, Caregiver பணியாளர்களுக்காக கனடா இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, தகுதியும் அனுபவமும் உடைய, கனேடிய உயர்நிலைப்பள்ளி பட்டயப்படிப்புக்கு இணையான படிப்பை முடித்த, Caregiver பணிக்காக கனடா வருபவர்களுக்கு எளிதில், அல்லது கனடாவுக்குள் நுழைந்ததுமே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Caregiver பணி என்பது, வயதானவர்களை மட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் உடற்குறைபாடுகள் கொண்டவர்களையும் கவனித்துக்கொள்ளும் பணியாகும்.
Comments are closed.