தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சோர்வு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை ஓய்வெடுக்குமாறு வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து திஸாநாயக்கவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, மாத்தறையில் நடைபெற்ற பேரணியில் தெரிவித்துள்ளார்.
“அநுரவுக்கு உடல்நிலை சரியில்லை, கடந்த சில நாட்களாக அவர் சோர்வடைந்துள்ளார். எனவே, ஒரு நாளாவது ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே அவருக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அநுரகுமார திஸாநாயக்க நேற்று காலை கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாடு மற்றும் விளையாட்டு மாநாட்டில் கலந்துகொண்டார்.
Comments are closed.