வெளிநாட்டில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

11

தளபதி விஜய்யுடன் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு கைகோர்த்த திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் உலகளவில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது.

வெளிநாட்டில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Goat Movie Overseas Box Office Collection

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, மீனாட்சி, ஜெயராம், யோகி பாபு என திரையுலக பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்திருந்தாலும் கூட உலகளவில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் GOAT திரைப்படம் வெளிநாடுகளில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே 8 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பிற்கு ரூ. 67 கோடி வரை வசூல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.