ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 அறிமுகம்: இடைநிறுத்தப்படும் 6 சாதனங்கள்

11

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் வருடாந்த செப்டெம்பர் நிகழ்வையொட்டி  ஐபோன் 16 (iPhone 16) சாதனத்தை அறிமுகப்படுத்துவதுடன் 6 தற்போதுள்ள 6 சாதனங்களை இடைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய,  ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 13,  ஏர்போட்ஸ் 2 மற்றும் ஏர்போட்ஸ் 3  ஆகியவை இடைநிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் தனது வருடாந்த செப்டெம்பர் நிகழ்வை இந்த ஆண்டு செப்டெம்பர் 9ஆம் தேதி குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடத்தவுள்ளது.

‘இட்ஸ் க்ளோடைம்’ என அழைக்கப்படும் இந்த நிகழ்வில் டிம் குக் தலைமையிலான நிறுவனத்தின் 4 புதிய ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்பு வெளியீடுகள் வெளியிடப்படும்.

இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போல், ஆப்பிள் புதிய ஐபோன் தொடரின் வெளியீட்டில் சில முந்தைய தலைமுறை சாதனங்களை நிறுத்த வாய்ப்புள்ளது.

இதற்கமையவே, ஐபோன் 16 சாதனத்தை அறிமுகத்தை தொடர்ந்து குறித்த 6 சாதனங்களும் இடைநிறுத்தப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments are closed.