ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதன்போது எம்.பி.க்களுக்கு வரியில்லா வாகன உரிமம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வாகன உரிமம் பெறுவது எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ஒரே சிறப்புரிமை என்பதால் அதில் கையெழுத்திடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிகவும் சுமூகமாக நடந்து வரும் இந்த கலந்துரையாடலில், ஜேவிபியின் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்களும் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments are closed.