பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எளிதாக நுழைய நிதி ஒதுக்கீடு

16

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் எளிதாக நுழைய 10.5 மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய அரசு, Brexit-க்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரித்தானிய குடிமக்கள் செல்வதை எளிதாக்கவும், ஆவண சோதனைகளை சீராக்கவும் 10.5 மில்லியன் பவுண்டுகளை செலவிடவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இம்மே மாதத்தில் இருந்து புதிய நுழைவு மற்றும் வெளியேறும் முறைமையை (Entry and Exit System – EES) அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம், பிரித்தானிய பயணிகள் தங்கள் முகம் மற்றும் விரல் ரேகையை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.

இந்த முறைமையை நடைமுறைப்படுத்த, பிரித்தானிய அரசு முக்கியமான துறைமுகங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்யவுள்ளது.

மேலும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், புதிய சோதனைகளுக்காக நியமனம், பயிற்சி ஆகியவற்றை செய்து கொண்டு வருகிறது.

டோவர் துறைமுகம், புல்க்ஸ்டோனில் உள்ள யூரோடன்னல் மற்றும் லண்டனில் உள்ள செயின்ட் பான்கிரஸ் ஸ்டேஷன் ஆகியவற்றில் 3.5 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பிரித்தானியா 2016ல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற தீர்மானித்ததைத் தொடர்ந்து, புதிய விதிமுறைகள் மற்றும் சோதனைகளை முன் பார்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

Comments are closed.