யாழில் இளம் குடும்பப் பெண் தீயில் எரிந்து உயிரிழப்பு

16

தீயில் எரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது, அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய துவாரகன் நிருத்திகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்ப பெண் கடந்த 25ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு அவரது கணவனே தீ வைத்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும், கணவன் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.