ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நகரசபையின் குப்பை வண்டிக்கு நிகரானவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
“சஜித் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் தாடி வளர்க்க இடமளிக்கப்படாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் உண்மையா என என்னிடம் பலர் கேட்கின்றார்கள்.
நானும் தாடி வளர்த்திருக்கின்றேன் என நான் கூறினேன். ஐந்து முறை தொழுகை செய்ய இடமளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. இவை எல்லாம் என்ன கதை, இது அரசியலா?
சஜித்தின் முகாம் அரசியல் ரீதியாக குழம்பிப் போயுள்ளது. தலைவர் முதல் கீழ் மட்ட உறுப்பினர்கள் வரையில் எவரிடமும் கொள்கையில்லை.
அவர்களிடம் இலக்கு இல்லை. திட்டமில்லை. செய்யும் வேலையில்லை. ஏதோ அர்த்தமற்ற வார்த்தைகளை சஜித் பேசி வருகின்றார்.
அதற்கு பொருத்தமான சிலர் அவருடன் இருக்கின்றார்கள். இதுவே இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு நேர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Comments are closed.