ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எவரினாலும் மாற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்ய முடியும் என கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்துடன் விவாதம் செய்யுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக சர்வதேச நாணய நிதியத்துடன் இந்த விவாதத்தை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை நிபந்தனைகளில் திருத்தம் செய்தால் நாடு மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments are closed.