ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு..! கணிக்க முடியாத நிலை

11

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தற்போதைய பிரசாரங்கள் மற்றும் சனக்கூட்டங்களை வைத்து, கணிக்கமுடியாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), சஜித் பிரேமதாச(Sajith Premadasa) மற்றும் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) ஆகிய மூன்று வலிமைமிக்க வேட்பாளர்களின் பிரசாரம் நாடு முழுவதும் தீவிரமாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவும்(Namal Rajapaksa) பேரணிகளில் கூட்டத்தை வரழைக்க முயற்சிக்கிறார்.

எனினும் முன்னைய தேர்தல்களைப் போலன்றி, கூட்டத்தின் எண்ணிக்கை வெற்றியாளரின் ஒரே குறிகாட்டியாக இருக்காது என்றே அரசியல் தரப்புக்கள் குறிப்பிடுகின்றன.

இலங்கை வாக்காளர்கள் முன்னரைப் போலன்றி, இப்போது அரசியல் ரீதியில் ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர்.

வாக்காளர்களில் பெரும்பாலானோர் வேட்பாளர்கள் தொடர்பில் இன்னும் சந்தேகத்தை கொண்டுள்ளனர்

எனவே செப்டம்பர் 20 ஆம் திகதி வரை அவர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கமாட்டார்கள் என்றும் அரசியல் தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

Comments are closed.