70 இலட்சம் வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கும் வேட்பாளர்! வெளியாகியுள்ள எதிர்வுகூறல்

8

தற்போது ரணில்  விக்ரமசிங்கவே முதலிடத்தில் இருக்கின்றார். ஏனைய பிரசார கூட்டங்கள் அனைத்தும் நடத்தப்பட்ட பின்னர் 70 இலட்சம் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2 வருடங்களுக்கு முன்னர் தம்புள்ளை பொருளாதார நிலையம் இருந்த நிலையை சற்று நினைத்துப் பாருங்கள். ரணில் விக்ரமசிங்க 5 கூட்டங்கள் மாத்திரம் தான் நடத்தியுள்ளார். தற்போது முதலிடத்தில் அவர் தான் இருக்கிறார்.

90 கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அவை நடந்து முடியும்போது 70 இலட்சம் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெறுவார்.

அவர் சொல்வதை சற்று மெருகூட்டி சஜித் சொல்கிறார். இன்னும் அவருக்கு ரணில் தான் தலைவர். முதுகெலும்புள்ளவர் தான் தலைவர். சவால்களை ஏற்கும் நபர்தான் தலைவர்.

இது பரீட்சார்த்தமாக செய்து பார்க்கும் சந்தர்ப்பமல்ல. அஸ்வெசும, உறுமய திட்டத்தை தொடர்வீர்களா என்பதை சஜித்தும் அநுரவும் இதுவரை சொல்லவில்லை. அந்தத் திட்டங்களைத் தொடர ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவாக வேண்டும்.

எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி தேநீர் அருந்தி விட்டுத்தான் அனைவருக்கும் தேர்தல் தினத்தில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.