இரண்டு வருடங்களில் சாதித்துக் காட்டினோம்: ஜனாதிபதி ரணில் பெருமிதம்

11

“இரண்டு வருடங்களில் எந்த அரசும் செய்ய முடியாததை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். அதுவே நாட்டின் முன்னேற்றம் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நேற்று முற்பகல் நடைபெற்ற  ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மேடையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் சிவலிங்கமும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், “இந்த மேடையில் எனக்கு றோயல் கல்லூரியில் கற்பித்த சிவலிங்கம் ஆசிரியர் இருக்கின்றார்.

13 – 14 வயதில் அவரிடம் கல்வி கற்றேன். 1961 ஆம் ஆண்டுகளில் நானும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அவரிடம் கற்றிருக்கின்றோம்.

எனவே, நாட்டை மீட்டெடுத்த பெருமையை அவருக்கும் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்கிரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர்.

எதென்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இளையோரின் எழுச்சி குறித்து ஆசிரியர் எங்களுக்கு கற்பித்தமை நினைவிருக்கின்றது.

அச்சமடைந்த நாட்டுக்குள் மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் செயற்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார். அதனால்தான் 2022 ஆம் ஆண்டில் சவால் மிக்க தருணத்தில் எவரும் ஏற்காத நாட்டை நான் பொறுப்பேற்றேன்.” என்றார்.

Comments are closed.