உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை! தேர்தல் ஆணைக்குழு

12

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று, தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அடிப்படை செலவுகள் தவிர ஏனைய செலவுகள் குறித்து திறைசேறி பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாவும் மேலும் சில வேட்பாளர்கள் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.