தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படையான முறையில் நியாயமான வரியை வசூலிக்கும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் செலுத்தப்படும் வரிகள் மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலாங்கொடையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தை பொறுப்பேற்ற இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும்.
மக்களும் வர்த்தகர்களும் வரி செலுத்த விரும்புவதாகவும், எனினும் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
அத்துடன் வரி செலுத்தும் போது, மக்கள் அதன் பலனைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.