இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா தயார் செய்தது.
குறித்த பரிந்துரைகளை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் (Antony Blinken) மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்ற அவர், இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிவின் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
அதன்பின் மத்தியஸ்தராக விளங்கும் எகிப்து, கத்தார் நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர்.
இதனால் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படாமல் உள்ளது.
இந்த நிலையில் 9ஆவது முறையாக பயணம் மேற்கொண்ட நிலையிலும் வெற்றிபெற முடியாமல் ஆண்டனி பிளிங்கன் நாடு திரும்பியுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் “எங்களுடைய செய்தி மிகவும் எளிமையானது. அது தெளிவானது. மிகவும் அவசரமானது. எங்களுக்கு தேவை போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்போதுதான் இது எங்களுக்கு தேவை. நேரம் மிகவும் முக்கியமானது. நாங்கள் ஏற்றுக் கொண்ட முன்னைய பரிந்துரைகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளுக்கு அமெரிக்கா இணங்குகிறது என ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஹமாஸின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.