பதவி விலகினார் சரத் பொன்சேகா!

11

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் சரத் பொன்சேகா அண்மையில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

இதன்படி கடந்த 5ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்திய சரத் பொன்சேகா, கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

மக்களின் கோரிக்கைக்கு அமைய தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.