நாமலை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கான காரணத்தை வெளியிட்ட மொட்டு

10

போராட்டத்தின் போது நாட்டு மக்கள் இளம் தலைவரை கோரினார்கள். இதன் காரணமாகவே நாமல் ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக களமிறக்கினோம் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச திறமையானவர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் சென்றுள்ள பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இன்று கட்சிக்கு எதிராகவும், கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இவர்கள் அடுத்த நாடாளுமன்றத்துக்கு தெரிவாகுவது கூட சந்தேகமாக உள்ளது. ஜனாதிபதி பக்கம் சென்றுள்ளவர்களுக்கு அங்கும் இடமில்லை, இங்கும் இனி இடமில்லை. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுபவர்களை நெருக்கடியான தருணங்கள் வெளிப்படுத்தும்.

வெற்றிப் பெறும் சிறந்த வேட்பாளரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். ஜனாதிபதி பக்கம் சென்றுள்ளவர்கள் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் பொறுமையை இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.