பிரதமரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட ஜனாதிபதி தலைமையிலான மாநாடு

10

ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த தொழிற்சங்க மாநாடு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் எதிர்ப்பு காரணமாக திடீரென நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நேற்று இந்த மாநாடு நடைபெறவிருந்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளின் மாநாட்டாக இது நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வரும் பிரசாரத்திற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாக மாநாட்டை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மாநாடு அடுத்த வாரம் மீண்டும் ஒரு திகதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.