சஜித் தலைமையிலான அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி: கட்சிக்குள் பேச்சுவார்த்தை

14

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்தால் பிரதமர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தரப்பு வெற்றியீட்டினால், பிரதமர் பதவி ரஞ்சித் மத்துமபண்டாரவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்துமபண்டார கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவி குறித்து தற்பொழுது கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் தேர்தல் தொகுதியான மொனராகல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களும் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.

ஏனைய கட்சிகள் தங்களது அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பது பற்றிய பேச்சுக்களை இதுவரையில் முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.