வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர்கள்

11

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெலாரஸில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்கும்பலின் தலைவன் லொக்கு பட்டி என்ற சுஜீவ ருவன் குமார அந்நாட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் வழி நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தென் மாகாணத்தை மையமாக கொண்ட பல கொலைகளுக்கு பின்னணியில் லொகு பட்டி மூளையாக செயல்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பெலாரஸ் நாட்டின் மற்றுமொரு பகுதியில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் ரொம்ப அமில ஆகியோரை பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், காஞ்சிபனை உள்ளிட்ட சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.