நீடிக்கப்படவுள்ள சட்ட மா அதிபருக்கான பணிக்காலம்

10

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்தின் ( Sanjay Rajaratnam) பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பரிந்துரைத்துள்ளார்.

சஞ்சய் ராஜரத்னத்திற்கு ஆறு மாத சேவை நீடிப்பு வழங்குவதற்கான பரிந்துரை ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையில் (CC) சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கூடும் போது இந்த கோரிக்கையை அரசியலமைப்பு பேரவை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 60 வயதாகும் சஞ்சய் ராஜரத்னம் பணி நீடிப்பைப் பெறவில்லை என்றால் ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.