டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர்: பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணை

16

சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம ருவன் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் மிதிகம ருவன் இன்று (31) அதிகாலை சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நடுன் சிந்தகா அல்லது ஹரக் கட்டாவின் நெருங்கிய உறவினர் என தெரிய வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், துபாயில் உள்ள இரவு விடுதியில் நடந்த சண்டை தொடர்பாக சர்வதேச காவல்துறை ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மிடிகம ருவன் என்பவரை துபாய் காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வருவதற்காக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்றிரவு துபாய் சென்றிருந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் இது இடம்பெற்றுள்ளது

ஹரக் கட்டாவின் பல குற்றங்களை துபாயிலிருந்து இயக்கியவர் மிதிகம ருவன் என்பதுடன்,குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து ஹரக் கட்டாவுக்கு தப்பிச் செல்ல உதவியவரும் மிதிகம ருவன் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.