சர்வதேச கடன் வழங்குனருடனான உடன்படிக்கை திருத்தப்படும்: மீண்டும் வலியுறுத்தும் சஜித்

11

சர்வதேச கடன் வழங்குனருடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தம் எதிர்கால ஆணையின் கீழ் திருத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின், புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயற்குழு நேற்று(01) சஜித் பிரேமதாசவை எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்தது.

இதன்போது மருத்துவத்துறையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

Comments are closed.