மதுபான போத்தல் ஒன்றின் விலையை நூறு ரூபாவினால் குறைக்குமாறு மதுபான உற்பத்தியாளர்களிடம் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி கோரிக்கை விடுத்துள்ளார்
மதுபான உற்பத்தியாளர்களுடன் மதுவரி திணைக்களத்தில் நேற்று (01) .இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக பாவனையாளர்கள் சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்துவதற்கான தூண்டுதல் அதிகரித்துள்ளதாகவும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை 600 முதல் 700 ரூபா வரை குறைவடைந்துள்ளதால் மதுபானத்தின் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விலையேற்றம் காரணமாக மது பாவனை நாற்பது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மதுபான உற்பத்தி பொருட்கள் மீது விதிக்கப்படும் கலால் வரி மற்றும் வரி காரணமாக விலையை குறைக்க முடியாதுள்ளதாக மதுபான உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Comments are closed.