ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை

17

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரினால் எவ்வித தடையும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தேர்தலை நடத்துவது தொடர்பான ஆதரவை பொலிஸார் வழங்குவார்கள் என அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்புக்கு தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பிரதி தேர்தல்கள் மா அதிபர் மற்றும் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், தேவையான பொலிஸ் அதிகாரிகளை வழங்குவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.