நாட்டில் குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் அதிகார சபை (Consumer Affairs Authority) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் டி.ஐ. உடுவர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு (Colombo) மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.