நிட்டம்புவ (Nitambuwa) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் இன்று (27) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இதனையடுத்து, ஜீப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.