ஏமன் துறைமுகம் மீது திடீர் வான்வழித் தாக்குல் நடத்திய இஸ்ரேல்

14

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது ஹூடைடாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அப்பகுதி தீ பற்றி எரிந்ததாகவும், வான்வழித் தாக்குதல்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் தொடர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் -காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டுள்ளதோடு, கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.