விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்க கிடைத்த அரிய சந்தர்ப்பம்: வைத்தியர் அர்ச்சுனா நெகிழ்ச்சி

18

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தை என் வாழ்வில் மறக்க முடியாது எனவும், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பழைய காயங்களை மீளத் தொடாதீர்கள் அதில் இரத்தம் நிரம்பி இருக்கின்றது. அவ்வாறு தொட்டால் அதிலிருந்து இரத்தம் தான் பெருக்கெடுக்கும்.

இலங்கைக்குள் இந்தநிலை தொடருமானால் நாம் எவ்வளவு ஆண்டுகள் சென்றாலும் எமது நாட்டை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்ல முடியாது.

தமிழ் மக்களுடைய பழைய பாதைகளை நாம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை.

இதேவேளை எனக்கு போராட்ட தமிழீழ வரலாறு பற்றிய பரந்தளவான அறிவு இல்லாவிட்டாலும் போராட்டகால நிகழ்வுகள் பற்றியும் அவர்களது வலியும் எனக்கு புரியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.