இலங்கை உட்பட GSP+ சலுகைகளை அனுபவிக்கும் அனைத்து நாடுகளும் அதனை இழக்கும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய கட்டணக் கொள்கையினால் இந்த அபாயம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். உலகில் அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ள 5 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா விதித்த கட்டணங்கள் குறித்து அரசாங்கம் அவசரமாக விவாதிக்க வேண்டும் என இலங்கை பொருட்கள் மற்றும் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் இனாம் கபூர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள கட்டணக் கொள்கை குறித்து விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஒரு அரசாங்கக் குழு அமெரிக்கா செல்லவுள்ளதாக சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்