வவுனியா(Vavuniya), தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது தவறான தொழிலில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(19) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி தவறான தொழிலில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Comments are closed.