இலங்கையின் விடயத்தில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம்” தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலமான பதிலில் ஆன் மேரி ட்ரெவெல்யன் (Anne-Marie Trevelyan)இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறையின் நம்பகத்தன்மை குறித்து பாதிக்கப்பட்ட சமூகங்கள் வெளிப்படுத்திய குறிப்பிடத்தக்க சந்தேகங்களை தமது நாடு அங்கீகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
கொன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் மேத்யூ ஒஃப்போர்ட் ( Mattew Offord)எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே ட்ரெவெல்யன் தமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
மேலும், நல்லிணக்கத்துக்கான எந்தவொரு பொறிமுறையும் சுயாதீனமாகவும், அர்த்தமுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதைகளை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.