நீதித்துறையின் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே உள்ளது- வலியுறுத்தும் ஜனாதிபதி

13

நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்துக்குள்ளேயே உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றின் நிறைவேற்று அதிகாரங்களில் நீதித்துறை தலையிடக் கூடாது என்ற தனது நீண்டகாலக் கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மகியங்கனையில் நடைபெற்ற “உறுமய” இலவச காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட “உறுமய” வேலைத்திட்டம், நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாட்டு மக்களுக்கு இலவச காணி உரிமையை முன்னரே வழங்கியிருக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் தனியார் ஹோட்டலுக்கு அரச காணியை வழங்க முடியுமானால், ஜனாதிபதி என்ற வகையில் தம்மால், ஏன் 2 மில்லியன் மக்களுக்கு காணி உரிமையை வழங்க முடியாது? ஏன்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயம் நீதிமன்றத்திற்கு செல்லும் என சிலர் எச்சரித்துள்ளனர். எனினும் அதிகாரம் நீதிமன்றத்திடம் இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

எனவே நாடாளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று தாம் எப்போதும் வலியுறுத்தி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.